அதிரை செக்கடி பள்ளி அருகே ரெடிமேட் ஆடைகள் கடையில் திருடர்கள் கைவரிசை (படங்கள் இணைப்பு)

அதிரை புதுமனைத்தெருவை சேர்ந்த முஹம்மது சாலிஹ். இவர் செக்கடிப்பள்ளி அருகே ரெடிமேட் ஆடைகள் விற்பனை செய்யும் கடையை நடத்தி வந்தார். நேற்று இரவு இவர் வழக்கம் போல் கடையை பூட்டி விட்டு வீட்டிற்க்கு சென்றுள்ளார். இந்த நிலையில் இன்று காலை கடையை திறக்க இவர் வந்தபோது கடையின் 2 பூட்டுக்களும் உடைக்கப்பட்டு பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். இதையடுத்து புகாரின் பேரில் கடைக்கு நேரடியாக வந்து ஆய்வு மேற்கொண்ட காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரனை நடத்தி வருகின்றனர்.

Close