இனி உங்க ஜியோ நம்பர் ”6596663433” – இப்படியும் இருக்கலாம்!

தொலை தொடர்புத்துறையில் அதிரடித்த ஜியோவின் அடுத்த அட்டகாசமாக 6 சீரிஸ் மொபைல் எண்கள் விரைவில் வருது என்கிறார்கள். என்ன விஷயம் தெரியுங்களா?

வரம்பற்ற டேட்டா மற்றும் வாய்ஸ் சேவைகளை வழங்கிய ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் டிடிச் விரைவில் வெளியாகும் என தெரிகிறது.

இலவச டேட்டா, வாய்ஸ் கால்கள் என இலவச சேவைகளை வாரி வழங்கும் ஜியோ நிறுவனம் அதன் புதிய பயனர்களுக்காக 6 எனத்தொடங்கும் மொபைல் எண்கள் ஒதுக்க அனுமதி பெற்றுள்ளதாக தெரிகிறது.

தொலைத் தொடர்புத் துறை (DOT) ஆனது இதுபோன்றதொரு அனுமதியை முதல் முறையாக ரிலையன்ஸ் ஜியோவிற்கு வழங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதன் மூலம் 6 சீரிஸ் எம்எஸ்சி (மொபைல் நிலைமாற்றம் குறியீடு) தொலைபேசி எண்களை வெளியிடுவதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளதாம்.

அசாம், ராஜஸ்தான், மற்றும் தமிழ்நாட்டில் இந்த 6 சீரிஸ் எம்எஸ்சி குறியீடுகள் வழங்கப்பட உள்ளது. மத்தியப் பிரதேசம் மற்றும் குஜராத்தில் 7 சீரிஸ் எம்எஸ்சி குறியீடுகளும், கொல்கத்தா மற்றும் மகாராஷ்டிராவில் 8 சீரிஸ் எம்எஸ்சி குறியீடுகளும் பெற்றுள்ளது என்று தகவல்கள் பரபரக்கின்றன.

இந்த 6 சீரிஸ் மொபைல் எண்களை அறிமுகம் செய்வதின் மூலம் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தினால் மாநிலங்களை அடிப்படையாக கொண்ட சேவைகளில் முன்னோக்கி செல்லமுடியும் என்று தொழிற்நுட்ப வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர்.

Close