அதிரையில் இஃப்தார் என்ற பெயரில் தொடரும் ஆடம்பர விருந்துகள்!

தற்பொழுது ரமலான் மாதம் நெருங்கியுள்ளது. இம்மாதத்தில் அதிரை இளைஞர்கள் பலர் பலரிடம் நிதி வசூல் செய்து தங்களுடைய நண்பர்கள் மத்தியில் ஆடம்பரமான இஃப்தார் பார்டிகளை வைக்கின்றனர். இதற்க்கு ஏற்பாடு செய்வதற்கே இவர்கள் இப்புனித மாதம் முழுவதையும் வீனடிக்கின்றனர்.
இந்த விருந்தில் கலந்துக்கொள்பவர்கள் யாவரும் வீட்டில் நல்ல உணவு உண்பவர்கள் தான். ஆனால் நோன்பு பிடிக்கும் சில ஏழை முஸ்லிம்கள் இஃப்தார் உணவை பள்ளிகளில் உண்டாலும் சஹர் உணவுக்கு கஷ்டப்படுகின்றனர்.
நாம் இது போன்று இஃப்தார் பார்டிகளுக்காக செய்யப்படும் உணவுகளை ஏழைகள் நோன்பு நோற்க கொடுத்தால் அவர்கள் பிடிக்கும் நோன்பின் நன்மை நமக்கும் கிடைக்கும்.
“சிந்திப்போம் செயல்படுவோம்”
-நூருல் இப்னு ஜஹபர் அலி

Advertisement
அதிரையில் குறைந்த மாத தவணையில் வீட்டு மனை பிரிவுகள்

Close