ஆட்சியமைக்க எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆளுநர் அழைப்பு!

அதிமுக சட்டமன்ற கட்சித் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட எடப்பாடி பழனிச்சாமியை தமிழகத்தில் ஆட்சியமைக்குமாறு ஆளுநர் வித்யாசாகர் ராவ் அழைப்பு விடுத்தார்.
ஆட்சியமைத்த பின்னர் அடுத்த 15 நாட்களில் சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்குமாறு ஆளுநர் கூறியுள்ளார். அதிமுகவின் சட்டப்பேரவைத் தலைவரான எடப்பாடி பழனிச்சாமி 3ஆவது முறையாக ஆளுநர் வித்யாசாகர் ராவை இன்று காலை 11.30 மணிக்கு சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின் போது, அவரை ஆட்சியமைக்குமாறு ஆளுநர் அழைப்பு விடுத்துள்ளார்.

Close