மதுரை அரசு மருத்துவ கல்லூரியில் முஹம்மது ஷா என்ற மாணவர் மர்ம மரணம் (வீடியோ)

கேரள மாநிலம் கொல்லத்தைச் சேர்ந்தவர் நஜீப். இவரது மகன் முகமது ஷா (வயது 20). இவர் மதுரை அரசு மருத்துவக்கல்லூரியில் விடுதியில் தங்கி இருந்து எம்.பி.பி.எஸ். 2-ம் ஆண்டு படித்து வந்தார். நேற்று இரவு முகமது ஷாவிடுதியின் 3-வது மாடியில் செல்போனில் பேசிக் கொண்டிருந்ததாக தெரிகிறது. அதன் பிறகு அவரை காணவில்லைஇந்த நிலையில் இன்று காலை அந்த விடுதியின் தரைப்பகுதியில் முகமது ஷா பிணமாக கிடந்தார். இது குறித்துதல்லாகுளம் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து உடலை கைப்பற்றி பிரேதபரிசோதனைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். முன்னதாக, மாநகர போலீஸ் துணைகமிஷனர் அருண்சக்திகுமாரும் சம்பவ இடத்தை பார்வையிட்டார். இறந்து கிடந்த முகமது ஷா தலை மற்றும்தொடைப்பகுதியில் காயங்கள் இருந்தன. இவர் தவறி விழுந்து இறந்தாரா? அல்லது கொலை செய்யப்பட்டாரா?என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Close