யார் இந்த எடப்பாடி பழனிசாமி..?

இன்று தமிழக முதலமைச்சராக பதவியேற்க்க இருக்கும் எடப்பாடி பழனிச்சாமியின் அரசியல் வரலாறு குறித்த சிறப்பு செய்தித்தொகுப்பை தற்போது காண்போம்.

சேலம் மாவட்டம் எடப்பாடியை அடுத்த சிலுவம்பாளையத்தில் விவசாயக் குடும்பத்தில் கருப்ப கவுண்டர், தவுசாயம்மாள் தம்பதிக்கு மகனாக பிறந்த எடப்பாடி பழனிசாமி இளங்கலை அறிவியம் பட்டம் படித்தவர். அ.தி.மு.க வில் தன்னை இணைத்துக்கொண்டு அரசியல் பிரவேசம் எடுத்த இவர் 1989 ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் எடப்பாடி தொகுதியிலிருந்து அ.தி.மு.க. ஜெ பிரிவில் சேவல் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

இதை தொடர்ந்து 1991 ஆம் ஆண்டு மீண்டும் அதே தொகுதியில் போட்டியிட்டு சட்டமன்றத்துக்குள் நுழைந்த அவர், 1998 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலிலும் வெற்றி பெற்றார். இதை தொடர்ந்து கடந்த 2011 ஆண்டு மீண்டும் எடப்பாடி தொகுதியிலிருந்து சட்டபேரவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டு, நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சராக அவர் பதவி வகித்தார்.

கடந்த ஆண்டும் நடைபெற்ற தேர்தலில் 4-வது முறையாக அதே தொகுதிக்கு சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட அவர் பொதுப்பணித்துறை அமைச்சராக தற்போது பொறுப்பு வகித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Close