அதிரை இளைஞர்களிடம் தொழில்நுட்பத்தால் ஏற்ப்பட்ட மாற்றங்கள்

காணாமல் போன விளையாட்டுக்கள்:
நமதூரில் இப்பொழுது இருக்ககூடிய சிறுவர்கள் மத்தியில்
தொழில்நுட்ப்ப சாதனங்களான லேப் டாப் , டேப் , ஐ போன்
போன்ற அதிநவீன தொழில்நுட்பத்தினை கருவிகளை பயன் படுத்த துவங்கியுள்ளனர். இதனால்
பழமையான விளையாட்டுகளான  கோலி, பம்பரம் ,கிட்டிபில் போன்ற
விளையாட்டுகளை விளையாட ஆர்வம் அற்றவர்களாக இருக்கின்றனர் . 
சிறுவர்கள் நல்ல சுறு சுறுப்பாக இருந்தாலும் மொபைல்  மற்றும் இதர
தொழில்நுட்ப கருவிகளில் விளையாடினாலும் தெருக்களில் நண்பர்களுடன் விளையாடும்
மகிழ்ச்சிகள் மொபைல்  மற்றும் இதர தொழில்நுட்ப கருவிகளில் விளையாடுவதால் கிடைத்து
விடாது. அவர்களுன் மூலையில் தாக்கம் ஏற்படுகின்றது . 

தொழில்நுட்பம்:

சிலர் எப்பொழுதும் தொழில்நுட்பம் சார்ந்த விளையாட்டினை
விளையாடுவதால் அவர்களின் மூளையின் செயல்பாடு  முற்றிலும்
மாறுபடுகின்றது . 
மாலை நேரங்களில் வெளியில் செல்வது மிக அவசியமானது. ஆனால்
அவ்வவேலையுளும் இன்டர்நெட்  பயன்படுத்துகின்றனர். இது போன்ற
விசயங்களினால் ஏற்ப்படும் விளைவு பெரிய தாக்கத்தினை ஏற்ப்படுத்தலாம்.
சிலர் இன்டர்நெட்டிற்கு அடிமையாகி விடுகின்றனர் இன்டர்நெட்டில்  கற்க கூடிய விஷயங்கள் அதிகளவில் உள்ளது. ஆனால் அதனை பயன்படுத்தாமல்  Facebook, Whatsapp போன்றவற்றினை
அதிகளவில் பயன்படுத்துவார்கள் வெளியில் செல்வார்கள் யாரிடமும் அதிகம் பேசாமல்  எப்பொழுதுமே
பேஸ் புக் மற்றும் வேற அப்ப்ளிகேசனை பயன்படுத்திக் கொண்டே இருப்பார்கள்.
தொழில்நுட்டத்தினை பயன் படுத்த வேண்டாம் என்று கூறவில்லை. அதுவும்  அவசியம் தான் அளவுக்கு அதிகமாக பயன்படுத்த
வேண்டாம். (Physical Game) மிக
மிக முக்கியம் என்பதினை உணர்ந்து செயல்பட்டால் ஆரோக்கியமான வாழ்வு நிச்சியம்
(இன்ஷா அல்லாஹ்) 
ஆக்கம்:முஹம்மது சாலிஹ்

Close