Adirai pirai
posts

பாசிச வாதிகளை பதை பதைக்க வைத்த அதிரை PFI அணிவகுப்பு பொதுக்கூட்டம் (படங்கள் மற்றும் வீடியோ)

பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் 10 ஆம் ஆண்டு நிறைவு தினத்தை முன்னிட்டு அதிராம்பட்டினம், காயல்பட்டினம், கோவை ஆகிய மூன்று பகுதிகளில் அணி வகுப்பு மற்றும் பொதுக்கூட்டம் இன்று மாலை நான்கு மணி முதல் துவங்கி நடைபெற்றது. இந்த அணி வகுப்பு அதிரை வண்டிப்பேட்டையில் இருந்து துவங்கி பேரூந்து நிலையத்தில் இருந்து போஸ்ட் ஆபீஸ், தக்வா பள்ளி  காலேஜ் ரோடு வழியாக ITI மைதானத்தில் நடைபெறு முடிவடைந்தது. இந்த பேரணியில் ராணுவ அணி வகுப்புக்கு நிகராக பி.எஃப்.ஐ அமைப்பினர் கச்சிதமாக நிகழ்த்திக்காட்டினர். இதில் பாசிய சக்திகளுக்கு எதிராக பலத்த கண்டன கோஷங்களும் எழுப்பட்டன.

இதனை தொடர்ந்து நடைபெற்ற பொதுக்கூட்டம் PFI மாவட்ட செயற்குழு உறுப்பினர் முஹம்மது தம்பியின் வரவேற்ப்புரையுடன் துவங்கியது. PFI மாவட்ட தலைவர்  ஹாஜா அலாவுத்தீன் தலைமையில் நடைபெற்ற இந்த பொதுக்கூட்டத்தில் PFI மாநில துணை தலைவர் M.முஹம்மது சேக் அன்சாரி, SDPI மாநில தலைவர் K.K.S.M.தெஹ்ளான் பாக்கவி, காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் S.வேலு சாமி, ஆல் இந்தியா இமாம்ஸ் கவுன்சில் தலைவர் A.அபிருத்தீன் மன்பஹி ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

இந்த நிகச்சியை காண அதிரை உட்பட மதுக்கூர், மல்லிப்பட்டினம், முத்துப்பேட்டை, சம்பை உள்ளிட்ட பல பகுதிகளிலும் வேன்கள் மூலம் ஆயிரக்கணக்கான மக்கள் மற்றும் மாற்று மத சகோதரர்கள் பலர் கலந்துகொண்டனர்.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy