Adirai pirai
உள்ளூர் செய்திகள்

அதிரை கடற்கரை தெரு தீனுல் இஸ்லாம் இளைஞர் நற்பணி மன்றத்தின் புதிய நிர்வாகிகள் தேர்வு

அதிரை கடற்கரை தெரு தீனுல் இஸ்லாம் இளைஞர் நற்பணி மன்றத்துக்கான புதிய நிர்வாகிகள் நேற்று ஜும்மா தொழுகைக்கு பிறகு அதிரை கடற்கரைத் தெரு ஜும்மாவில் பொறுப்பேற்றுக்கொண்டனர். இந்த கூட்டத்தில் கடற்கரை தெரு முஹல்லா வாசிகள், இளைஞர் நற்பணி மன்ற நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

இதில் ஒவ்வொரு ஜும்மாவுக்கு பிறகும் நற்பணி மன்ற கூட்டத்தினை நடத்துவது என்றும் மாதாந்திர சந்தா வசூலிப்பது என்றும் முடிவு செய்யப்பட்டது.

அதன் நிர்வாகிகள் விபரம்:

தலைவர்: அப்துல்லாஹ்

துணை தலைவர்: முபீஸ்

செயலாளர்: ரசீன்

துணை செயலாளர்: அப்பாஸ்

பொருளாளர்கள்: ஆசிப், சமீர்

ஒருங்கினைப்பாளர்கள்: ஹாஜா முஹைதீன், செய்யது, ராவுத்தர்