10 ஆண்டுகளில் இல்லாத ஆளவு, இந்த ஆண்டு சூரியன் சுட்டெரிக்கும்…! எச்சரிக்கை!

டெல்லி உள்ளிட்ட வட இந்தியாவில் வெயில் கடுமையாக இருக்கும் என்று இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. 10 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு இந்தியாவில் வெயில் அதிகரிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஏற்கனவே மழை இல்லாமல், வறட்சியால் தமிழக மக்களும், விவசாயிகளும் தவித்து வருகின்றனர். இதனால் சென்னை உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் தண்ணீர் பஞ்சம் ஏற்படும் சூழலும் வரலாம் என்று கூறப்படுகிறது. இந்த சூழலில் இந்திய வானிலை ஆய்வு மையத்தின் முடிவுகளை வைத்து பார்க்கையில் நாம் அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வது நலம்.

Close