அதிரையில் இந்த வருடமும் மாணவிகளே முதலிடம்!

இன்று காலை 10 மணியளவில் 12ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. அதிரையில் இந்த முறையும் தேர்ச்சி விகிதம் சுமார் ரகம் தான். 3 பள்ளிகளிளும் 1 மாணவி மட்டுமே 1100 மதிப்பெண்களுக்கும் மேல் பெற்றிருக்கிறார். 
அதுமட்டும் இல்லாமல் கடந்த வருடங்களைப் போல் இந்த ஆண்டும் மாணவிகளே முதல் இடம் பெற்றுள்ளார்கள். மாணவர்களில் ஒருவர் மட்டுமே ஆயிரம் மதிப்பெண்களுக்கும் மேல் எடுத்துள்ளார். இந்த தேர்வு முடிவுகளை வைத்து பார்க்கும் போது மாணவிகளே முதல் இடம் பெற்றுள்ளனர். வரும் 10 வகுப்பு தேர்வு முடிவுகளிலாவது மாணவர்கள் முதல் இடம் பெறுவார்களா என எதிர்ப்பார்ப்போம்?
Close