முத்துப்பேட்டையில் ஆற்றில் சிக்கி 14 மணி நேரம் உயிருக்கு போராடியவரை மீட்ட TNTJ வினர் (படங்கள் இணைப்பு)

திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை ஆசாத்நகர் அருகில் உள்ள கோரையாறு தடுப்பணை (சட்ரஸ்) பகுதியில் உள்ள கருவை காட்டில் நேற்று முன்தினம் அதிகாலை 48வயது மதிக்கக்கூடிய மனநலம் பதிக்கப்பட்ட நபர் ஒருவர் அமர்ந்து இருந்தார். அப்பொழுது சுமார் 7மணியளவில் அங்கே வந்த அப்பகுதியில் பன்றிகள் வழக்கும் துப்புரவு தொழிலாளி ஒருவர் அந்த மனநலம் பதிக்கப்பட்ட நபரை தாக்கி விரட்டி உள்ளார்.

அப்பொழுது என்ன செய்வது என்று திக்குத்தெரியாத அந்த மனநலம் பதிக்கப்பட்ட நபர் அதேபகுதியில் உள்ள கோரையாற்றில் குதித்து ஓடினார் இதில் நடு ஆற்றில் சென்றவர் சேர் சூழ்ந்த பகுதியில் கிக்கி வரமுடியாமல் தவித்தார். மேலும் அதன் சுற்றிலும் கருவை முள்புதர்கள் மண்டி கிடப்பதால் அவர் வருவதில் சிக்கல் ஏற்பட்டது. அந்தநேரத்தில் பார்த்த சிலர் காப்பாற்ற முயன்றனர் முடியவில்லை பிறகு சென்றுவிட்டனர். இப்படியே மாலை வரை இளைஞர்கள் ஒவ்வொருவராக வந்து மீட்க போராடியும் பலன் இல்லாததால் இருட்ட துவங்கியதும் அவரை காப்பாற்றுவதில் நம்பிக்கை இழந்த இளைஞர்கள் என்ன செய்வது? என்று தெரியாமல் தவித்தனர். இதனால் பெரும் பரபரப்பாகி நூற்றுக்கும் மேற்பட்டோர் திரண்டனர்.

அப்பொழுது அங்கு வந்த தவ்ஹீத் ஜாமாஅத் அமைப்பை சேர்ந்த கருத்தப்பா சித்திக் தலைமையில் இளைஞர்கள் ஆற்றுக்குள் இறங்கி அந்த நபரை மீட்க போராடினர் முடியாததால் முத்துப்பேட்டை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த நிலைய பொறுப்பு அலுவலர் நெடுஞ்செழியன் தலைமையில் வீரர்கள் நாகசுந்தரம், சொக்கலிங்கம், பிரபாகரன், முகம்மது நவாஷ் ஆகியோர் கடுமையான இருட்டில் டார்ச்லைட் வெளிச்சத்துடன் ஆற்றுக்குள் இறங்கி சுமார் ஒருமணிநேரம் போராடி நேற்று முன்தினம் இரவு 10 மணிக்கு அந்த நபரை கரைக்கு கொண்டு வந்தனர். உடல் நடுக்கத்துடன் இருந்த அவரை தீயணைப்புவீரர்களும் தவ்ஹீத் ஜாமாஅத் அமைப்பை சேர்ந்த கருத்தப்பா சித்திக் அவருக்கு தண்ணீர் மற்றும் உணவுகள் ஊட்டி விட்டு முதலுதவி செய்து உடைகள் மாற்றி தேற்றினர்.

பின்னர் சிகிச்சைக்காக தீயணைப்பு வாகனத்தில் ஏற்றி முத்துப்பேட்டை அரசு மருத்துவமனையில் அந்த நபர் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். சிகிச்சை அளித்த டாக்டர் நல்ல நிலையில் இருப்பதாக தெரிவித்தனர். இந்தநிலையில் கடுமையான் இருட்டிலும் பாதுக்காப்பு இல்லாத அந்த பகுதியில் துணிவோடும் ஆற்றில் இறங்கி கடமை உணர்வுடன் அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்த தீயணைப்பு வீரர்களையும், மனிதநேயத்துடன் அவருக்கு பல்வேறு உதவிகளை செய்த தவ்ஹீத் ஜாமாஅத் அமைப்பை சேர்ந்த கருத்தப்பா சித்திக் ஆகியோரை பொதுமக்கள் பாராட்டினர்.

நன்றி: முஹைதீன் பிச்சை

Close