கொல்கத்தாவில் 25கி.மீ மாரத்தான் ஓட்டப்போட்டியில் முதலிடம் பிடித்து சாதித்த முத்துப்பேட்டை இத்ரீஸ்! (படங்கள் இணைப்பு)

கொல்கத்தாவில் டாடா ஸ்டீல்ஸ் சார்பாக 25 கிலோ மீட்டருக்கான மாரத்தான் ஓட்டப்போட்டி பல பிரிவுகளின் கீழ் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதனை இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கங்குலி தொடங்கி வைத்தார். இதில் இந்திய கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் மற்றும் பல விளையாட்டு பிரபலங்கள் கலந்துகொண்டனர். இந்த போட்டியில் 45-50 வயதுக்குட்பட்டோருக்கான பிரிவில் முத்துப்பேட்டையை சேர்ந்த முஹம்மது இத்ரீஸ் எல்லையை 1:37:36 மணி நேரத்தில் கடந்து முதலிடம் பிடித்து சாதித்தார். இதில் உலக அளவில் தலைசிறந்த பல தொழில்முனை வீர்ர்கள் கலந்துகொண்டனர். இத்ரீஸ் அவர்கள் இதற்க்கு முன்பாக டிசம்பர் மாதம் மும்பையில் நடைபெற்ற மாரத்தான் போட்டியிலும் முதலிடத்தினை பிடித்து சாதித்தார்.

வயது கடந்து விட்டது விளையாட்டை நிறுத்திவிடுவொம் என்று அல்லாமல், இந்த வயதிலும் விளையாட்டில் சாதிக்க முடியும் என்பதற்க்கு உதாரணமாக முகம்மது இத்ரீஸ் திகழ்கிறார் என்பதே நிதர்சனமான உண்மை. இவர் மேன்மேலும் பல சாதனைகளை படைக்க அதிரை பிறை சார்பாக வாழ்த்துகிறோம்.

Close