அதிரையை மூடிய பனிப்போர்வை (படங்கள் இணைப்பு)

அதிரையில் கடந்த சில மாதங்களாகவே அதிகாலை நேரங்களில் கூடுதல் பனி மூட்டங்களுடன் இருளாக காட்சியளிக்கிறது. இதனால் காலையில் தொழில் செய்யும் பால் வியாபாரிகள், பேப்பர் கடைக்காரர்கள், கட்டிட வேலைக்கு செல்லும் தொழிலாளர்கள், பள்ளிக்கூட மாணவ மாணவிகள் பாதிக்கப்படுகிறார்கள். ஈசிஆர் சாலையில் பனி மூட்டம் காரணமாக வாகன ஓட்டிகள் சிரமத்திற்குள்ளாகினர். பிப்ரவரி மாதம் இறுதியை எட்டியுள்ள நிலையிலும் அதிரையில் பனி நீடிப்பது பருவ நிலை மாற்றத்தை உணர்த்துகிறது.

வளி மண்டலத்தில் ஈரப்பதம் அதிகரித்தால் கடும் பனி மூட்டம் அதிரையில் மட்டும் இன்றி, அதன் சுற்று வட்டார பகுதிகளிலும், தமிழ் நாட்டின் பல பகுதியிலும் காலை 10 மணி வரை நீடிப்பதால் உள்ளூர் வெளியூர் விமான சேவைகள், ரயில் போக்குவரத்து, சாலை போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. தமிழ் நாட்டின் பல பகுதிகளில் காலை வரை பனி மூட்டமாகவே உள்ளது.

Close