தஞ்சையில் நடைபெற்ற மாற்று திறனாளிகளுக்கு செயற்கை உபகரணங்கள் வழங்குவதற்கான மதிப்பீட்டு முகாம்

மாவட்ட மாற்று திறனாளிகள் நல அலுவலகம், இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி, மாவட்ட ஊரக வாழ்வாதார இயக்கம் இணைந்து மாற்று திறனாளிகளுக்கான செயற்கை உபகரணங்களை வழங்குவதற்கான மதிப்பீட்டு முகாம், தஞ்சை ரெட் கிராஸ் அரங்கில் இன்று காலை 9:30 மணியளவில் துவங்கி நடைபெற்றது. இதனை மாவட்ட ஆட்சியர் அண்ணாதுறை தொடங்கி வைத்தார்.

இதில் செயற்கை உபகரணங்கள், முட நீக்கியல் சாதனங்கள், தானியங்கிகள், தாங்கிகள் வேண்டி 150 மாற்றுதிரணாளிகளுக்கு உபகரணங்கள் வழங்கிட மதிப்பீடு செய்யப்பட்டது. இவை உடனடியாக தயார்படுத்தப்பட்டு மாற்றுதிரணாளிகளின் பயன்பாட்டிற்கு உடனடியாக வழங்கப்படவுள்ளன.

இதில் மாவட்ட மாற்றுதிரணாளிகள் நல அலுவலர், இரா.இராஜசந்திரன், மகளிர் திட்ட இயக்குனர் திருமதி ரேவதி, ரெட்கிராஸ் தலைவர் எஸ்.இராஜமாணிக்கம், துணை தலைவர் ஜி.ஜெயக்குமார், செயலாளர் டாக்டர் யூ.ஜோசப், பொருளாளர் எஸ்.முத்துக்குமார், ஆலோசனைக்குழு தலைவர் டாக்டர்.வி.வரதராஜன், இரத்த வங்கி தலைவர் டாக்டர் டி.வி.சாத்தப்பன், இரத்த வங்கி மருத்துவர் டாக்டர் டி.எஸ்.சந்திரா, நிர்வாக குழு இயக்குனர் அதிரை மரைக்கா இத்ரிஸ் ஆகியோர் கலந்துகொண்டனர்.

 

Close