அதிரை SISYA மற்றும் இமாம் ஷாபி பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழகம் இணைந்து நடத்திய கல்வி விழிப்புணர்வு நிகழ்ச்சி…!

அதிராம்பட்டினம் ஷம்சுல் இஸ்லாம் சங்க இளைஞர் அமைப்பு பள்ளி மாணவர்களுக்கு கல்வி குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், அடுத்தது அவர்கள் தேர்வு செய்ய வேண்டிய இலக்குகள் குறித்து நிர்ணயம் செய்யவும் கடந்த டிசம்பர் மாதம் 28 ஆம் தேதி அடுத்தது என்ன என்ற பெயரில் கல்வி வழிகாட்டி நிகழ்ச்சியை நடத்தியது. இதன் தொடர்ச்சியாக இந்த அமைப்பு, இமாம் ஷாஃபி (ரஹ்) மெட்ரிக் மேல் .நிலைப் .பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழகமும் இணைந்து பத்து மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கான வெற்றிப்படிகள் – கல்வி வழிகாட்டி என்ற நிகழ்ச்சி, பிப்ரவரி 26, ஞாயிற்றுக்கிழமை மதியம் 3 மணி முதல் இமாம் ஷாஃபி பள்ளி வளாகத்தில் நடத்தியது. இந்த நிகழ்ச்சியை பள்ளி மாணவர் எம்.எஸ். சஹல் கிரா அத் ஓதி துவங்கினார்., பள்ளி ஆசிரியைகள் தமிழ் தாய் வாழ்த்து பாடினர். இமாம் ஷாஃபி (ரஹ்) மேல் .நிலை .பள்ளி, பெற்றோர்-ஆசிரியர் கழகத் தலைவர், ஹாஜி ஓ.கே.எம். சிபகதுல்லா தலைமை தாங்கினார், இமாம் ஷாஃபி (ரஹ்) மேல் .நிலை .பள்ளி, பெற்றோர் – ஆசிரியர் கழக இணைச் செயலாளரும், ஷம்சுல் இஸ்லாம் சங்க இளைஞர் அமைப்பின் செயலாளருமான . எம். எஃப். முஹம்மது சலீம் வரவேற்புரை நிகழ்த்தினார்.

ஷம்சுல் இஸ்லாம் சங்க இளைஞர் அமைப்பின் தலைவர், எஸ். அஹமது அனஸ்,
இமாம் ஷாஃபி (ரஹ்) மேல் .நிலைப்.பள்ளி இயக்குனர், திருமதி டி.வி. ரேவதி, பள்ளியின் முதல்வர், திருமதி ஏ. மீனா குமாரி, .பள்ளியின், பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் ஹாஜி எஸ்.ஏ. அப்துல் ஹமீது ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சிறப்பு அழைப்பாளர்களான, திருச்சி காவேரி மகளிர் கல்லூரியின் பேராசிரியர், முனைவர், எம். ஆசியா தாரா, அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் கல்லூரி பேராசிரியர் கே. செய்யது அஹமத் கபீர், அதிரை சுற்றுச் சூழல் மன்றம் 90.4 ன் தலைவர் வி. விவேகானந்தம், ஷம்சுல் இஸ்லாம் சங்க இளைஞர் அமைப்பின் இணைச் செயலாளர் வழக்கறிஞர் இசட். முஹம்மது தம்பி ஆகியோர் சிறப்புரைகள் நிகழ்த்தினர்.

பள்ளியின் தமிழாசிரியர் P.பார்த்தசாரதி நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கினார். ஷம்சுல் இஸ்லாம் சங்க இளைஞர் அமைப்பின் துணைத்தலைவர் மரைக்கா இத்ரீஸ், பொருளாளர் எஸ். ஷேக் அலி, மற்றும் நிர்வாகிகளும் கலந்து கொண்டனர். பள்ளி மாணவர் ஜே. அகமது தஸ்லீம் துஆ ஓத, நாட்டுப்பண்ணுடன் நிகழ்ச்சி நிறைவுற்றது.

 

Close