தாய்மார்களே எச்சரிக்கை! வாஷிங்மெஷின் தண்ணீரில் மூழ்கி இரட்டை குழந்தைகள் பலி!

டெல்லியில், பெண் ஒருவர் துணி துவைப்பதற்காக வாஷிங் மிஷினை ஆன் செய்துவிட்டு, வெளியே சென்றுள்ளார். அப்போது, வீட்டில் மூன்று வயதான இரட்டைக் குழந்தைகள் தனியாக இருந்துள்ளனர். அவர், வீடு திரும்பிய போது குழந்தைகளை காணவில்லை. இதையடுத்து குழந்தைகளை பல்வேறு இடங்களில் தேடியுள்ளனர். பின், இரண்டு குழந்தைகளின் உடல்களையும் வாஷிங் மிஷினில் இருந்து மீட்டுள்ளனர்.

குழந்தைகள் விளையாடிக்கொண்டிருந்த போது, வாஷிங்மிஷினில் தவறி விழுந்தது தெரியவந்துள்ளது. இதைத்தொடர்ந்து குழந்தைகளை மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது, அவர்கள் உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். அந்த வாஷிங் மிஷினில் 15 லிட்டர் தண்ணீர் இருந்துள்ளது. இந்த சம்பவம் அங்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Close