அமெரிக்காவில் ட்ரம்பின் முஸ்லிம் விரோத போக்கால் வெள்ளை மாளிகையில் இருந்து வெளியேறிய ருமானா அகமத் (வீடியோ)

அமெரிக்க அதிபராக பொ றுப்பேற்ற டொனால்ட் டிரம்ப், ஈரான், ஈராக், சிரியா, லிபியா, சோமாலியா, சூடான், ஏமன் ஆகிய 7 இஸ்லாமிய நாடுகளை சேர்ந்தவர்கள் 90 நாட்களுக்கு அமெரிக்கா வருவதற்கு விசா வழங்கப்பட மாட்டாது என அறிவிப்பு வெளியிட்டார். அதிபர் டிரம்பின் இந்த அறிவிப்பு அனைத்து தரப்பினரிடையேயும் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. இந்நிலையில், அதிபரின் இந்த தடை உத்தரவை எதிர்த்து, தனது பதவியை ராஜினாமா செய்ததாக வெள்ளை மாளிகையில் பணிபுரிந்த ருமானா அகமத் என்ற பெண் ஊழியர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பத்திரிக்கை ஒன்றில் அவர் கூறியிருப்பதாவது: வெள்ளை மாளிகை மற்றும் தேசிய பாதுகாப்பு கவுன்சிலில் கடந்த 2011ம் ஆண்டு முதல் பணியாற்றி வந்தார்.

வங்கதேச வம்சாவளியை சேர்ந்த நான், பர்தா அணியும் இஸ்லாமிய பெண்.

வெள்ளை மாளிகையின் மேற்கு பிரிவில் பர்தா அணிந்து பணியாற்றிய ஒரே ஒரு இஸ்லாமிய பெண் நான் மட்டுமே. ஒபாமா நிர்வாகம் எப்போதுமே என்னை வரவேற்பதாக உணர செய்தது. ஆனால், டிரம்ப் எப்போதும் எங்கள் சமூகத்தை குறை கூறியே வந்தார். 7 இஸ்லாமிய நாடுகளுக்கு தடை விதித்த உடனே நான் இங்கு நீண்ட நாட்கள் இருக்க முடியாது, பணியாற்ற முடியாது என்பதை தெரிந்து கொண்டேன். எட்டு நாட்களே அங்கு நீடித்தேன். பிறகு எனது பணியை ராஜினாமா செய்துவிட்டேன் என்றார்

Close