அதிரையில் டெங்கு, பன்றிக்காய்ச்சல் உற்பத்தி கூடம் (படங்கள் இணைப்பு)

சமீபத்தில் அனைத்து பஞ்சாயத்து அதிகாரியின் தலைமையில் அதிராம்பட்டினத்தில் சுகாதாதர சீர்கேட்டை கெடுக்கும் குப்பைகள், கழிவுநீர் அகற்றம் நடைபெற்றும் தற்பொழுது கொசு உற்பத்தி அதிகள்வில் அதிரையில் அனைத்து பகுதிகளிலும் அழகான கூடம் அமைக்கும் வகையில் அதிரை பேரூராட்சியின் அலட்சிய பணி எப்பொழுதும் போல் அரங்கேறிவிட்டது. மக்கள் சாக இன்னும் மானியம்கூட அரசு வழங்கும் என்ற நிலைபாடு அதிரையில் வளர்ந்துவருகிறது. அதிரை மக்கள் சுகாதார சீர்கேட்டை நோக்கி குறிவைக்கப்படுகிறார்கள் என்று எண்ணதை அதிரை பேரூராட்சி கொசுக்கூடம், கழிவுநீர் தேக்கம், குப்பை மேடமைத்தல் போன்ற பணிகளை செம்மையாய் செய்வதிலிருந்து உணர்த்துகிறது. இன்னும் போற போக்க பார்த்தால் “இதற்கு மானியம் தருவார்கள் போல”.. அந்த வகையில் அதிரை அய்வா சங்கம் சார்பாக இளைஞர்கள் போஸ்ட் ஆபிஸ் தெரு  கடைத்தெரு NKS சவுண்ட் சர்வீஸ் அருகே டெங்கு உற்பத்தி கூடம் என்று பேனர் வைத்துள்ளது வரவேற்பை பெற்றுள்ளது.

Close