இன்று வங்கிகள் இயங்காது…!

நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் 10 லட்சம் பேர் செவ்வாய்க்கிழமை வேலைநிறுத்தம் செய்கின்றனர். இதன்படி, தமிழகத்தில் வங்கி ஊழியர்கள், அதிகாரிகள் உள்பட 65 ஆயிரம் பேர் வேலைநிறுத்தத்தில் ஈடுபடுகின்றனர்.
பண மதிப்பிழப்பு நடவடிக்கையின்போது அதிக நேரம் பணிபுரிந்த ஊழியர்களுக்கு அதிக ஊக்கத்தொகை வழங்க வேண்டும், வங்கிகளை தனியார் மயமாக்கக் கூடாது, வாராக் கடனை முழுவதுமாக வசூலிக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஒரு நாள் வேலைநிறுத்தம் நடைபெறுகிறது.

Close