ஏப்ரல் 1 முதல் இலவச ஜியோ சேவை ரத்து…!

வரும் ஏப்ரல் 1-ம் தேதி முதல், ஜியோ இலவச இணைய சேவை ரத்து செய்யப்படும் என ரிலையன்ஸ் நிறுவன தலைவர் முகேஷ் அம்பானி அறிவித்துள்ளார்.

இதுகுறித்து மும்பையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஜியோ சேவை தொடங்கி 170 நாட்கள் ஆன நிலையில், 10 கோடி வாடிக்கையாளர்கள் இணைந்துள்ளதாக குறிப்பிட்டார்.

தற்போது ஜியோ இணைப்பைப் பெற்றுள்ளவர்கள், அடிப்படை சந்தாதாரர்கள் ஆக முதன்முறைக் கட்டணமாக 99 ரூபாய் செலுத்த வேண்டும் என்றும், நிரந்தர சந்தாதாரர் ஆன பின்னர், மாதந்தோறும் 303 ரூபாய் கட்டணமாக செலுத்தி வாய்ஸ் கால்கள் மற்றும் இணைய சேவையை அளவின்றி பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும்
குறிப்பிட்டார். மேலும் மற்ற போட்டி நிறுவனங்களை காட்டிலும் 20 சதவீத கூடுதல் டேட்டா வசதி வழங்கப்படும் எனவும் முகேஷ் அம்பானி தெரிவித்தார்.

Close