யூ டியூப்-ல் பயனர்களுக்கு புதிய வசதி!!

காணொளிக்காட்சிகள் மூலம் உலகமெங்கும் கோடிக்கணக்கான ரசிகர்களைக் கவர்ந்திழுத்திருக்கும் ‘யூ டியூப்’ (you tube) வலைத்தளம் சந்தாதாரர்களுக்குப் பயனளிக்கும் விதமாக புதிய வசதியினை அறிமுகப்படுத்தியுள்ளது.இந்த புதிய வசதியின் மூலம் பயனர்கள், தங்கள் காணொளிக்காட்சிகளைப் பகிர்ந்து கொள்ளும் போது, மூன்று நொடிகள் ஓடக்கூடிய முன்னோட்டக்காட்சிகள் (Intro Videos)-ஐ தங்கள் சேனல்களில் இணைத்துக் கொள்ள முடியும். அவ்வாறு இணைப்பதன் மூலமாக தொடர்பாளர்களிடத்தில் சேனல்களை மேம்படுத்த முடியும்.இந்த புதிய வசதி பற்றி யூ டியூப் நிறுவனம் கூறுகையில்,”Intro Videos வசதியினை விளம்பரங்களுக்கோ அல்லது தயாரிப்பு இடங்களுக்கோ பயன்படுத்த முடியாது. பயனர்களின் சேனல்களை விளம்பரப்படுத்தவே உருவாக்கப்பட்டுள்ளது” என்று கூறியுள்ளது.

Close