Adirai pirai
Uncategorized

திடீர் மழையால் ஊட்டியாக மாறிய அதிரை! (புகைப்படங்கள்)

அதிரையில் இன்று மாலை 3 மணியிலிருந்து வானம் லேசான மேக மூட்டத்துடன் காணப்பட்டது. அதிரை மக்கள்  எப்படா மழை வரும் என்று எதிர்பார்த்து காத்திருந்தனர். இவர்களின் காத்திருப்புக்கு 4:50 மணியளவில் விடை கிடைத்தது.
கருமேகங்கள் சூழ குளிர்ச்சியான காற்றுடன் கூடிய கன மழை வானை பிளந்துக்கொண்டு பெய்தது. சுமார் 20 நிமிடங்கள் விடாமல் பெய்த இந்த மழையால் அதிரை முழுவதும் குளிர்ச்சியான சூழல் உருவாகியுள்ளது.
சில நாட்களாக காலையில் லேசாக தோன்றி மறைந்த இந்த மழை இன்று கன மழையாக உருவெடுத்தது. இதனால் வெயிலின் வாட்டத்தால் களைப்புடன் காணப்பட்ட மக்கள் தற்பொழுது மகிழ்ச்சியடைந்துள்ளனர்.