கோட்டைப்பட்டினம் அருகே கோர விபத்து! ஜெய்னுல், பாரிஸ் என்ற 2 பள்ளி மாணவர்கள் மரணம்!

சாலை_விபத்தில்_இரண்டு_பள்ளி

மாணவர்கள்_பலி

நாள்:03/03/2017 மாலை 5 மணியளவில்

புதுக்கோட்டை மாவட்டம் அம்மாப்பட்டினத்தை சேர்ந்தவர் ஜெய்னுலாப்தீன்(17)தந்தை பெயர் அகமது அலி அதே ஊரை சேர்ந்தவர் பாரிஸ்(17)தந்தை பெயர் நெய்னா முகம்மது இருவரும் நண்பர்கள் ஆவார்கள்.

இதில் ஜெய்னுலாப்தீன் என்பவர் கோட்டைப்பட்டினம் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 11-ம் வகுப்பும்  பாரிஸ் என்பவர் மணமேல்குடியில் உள்ள அரசு பள்ளியில் 11- ஆம் வகுப்பு படித்து வருகின்றனர்.

இந்நிலையில் பாரிஸ் என்பவர் தனது இருசக்கர வாகனத்தில் கோட்டைப்பட்டினம் பகுதியில் படித்து வரும் ஜெய்னுலாப்தீன் என்பவரை ஏற்றிக்கொண்டு அம்மாப்பட்டினத்தை நோக்கி சென்றனர்.அப்போது ஓடாவிமடம் அருகே சென்ற போது வேளாங்கன்னியிலிருந்து ராமேஸ்வரம் நோக்கி சென்ற சுற்றுலா வேன் எதிர்பாராத விதமாக இவர்கள் மீது மோதியது.இதில் ஜெய்னுலாப்தீன் என்பவர் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.பின்னர் படுகாயம் அடைந்த பாரிஸ் என்பவர் சாலையில் கிடந்துள்ளார் இந்நிலையில் தூத்துக்குடியிலிருந்து காரைக்கால் நோக்கி சென்ற சரக்கு வேன் பாரிஸ் மீது ஏறியது இதில் அவர் உடல் நசுங்கி உயிரிழந்தார்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்

பைக் மரணம் எத்தனை நடந்தாலும் பிள்ளைகளுக்கு அறிவு வருவதே இல்லை. பெற்றோர்களுக்கும் எந்த அக்கரையும் இல்லை போலும். மிகுந்த கவலையளிக்கிறது.

தகவல்
தம்பி ராஜாமுகம்மது, கோட்டைபட்டினம்

பேரா.செய்யது அஹமது கபீர்

Close