நாட்டில் பள்ளிக் கல்வி பெறுபவர்கள் 98 சதவீதம் ஆக உயர்வு” -பிரகாஷ் ஜவடேகர்

நாட்டில் பள்ளிக் கல்வி பெறுபவர்களின் அளவு 98 சதவீதமாக உயர்ந்துள்ளதாக மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார். சென்னை நந்தம்பாக்கத்தில் தெற்காசிய கல்வியியல் மாநாட்டை மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தொடங்கி வைத்தார். இதனைத்தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய அவர், வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது, கல்வித்துறையில் செய்யப்பட்ட மேம்பாட்டு நடவடிக்கையால், தற்போது 98 சதவீதம் பேர் பள்ளி கல்வி பெற்றவர்களாக உள்ளதாக தெரிவித்தார். படித்த பிள்ளைகள் கல்வி அறிவு இல்லாத தங்கள் பொற்றோர்களுக்கு எழுதப்படிக்க கற்றுக்கொடுக்க வேண்டும் என்றும் பிரகாஷ் ஜவடேகர் கூறினார்

Close