தமிழகத்தில் நாளை முதல் பால் விலை உயர்வு!

நாளை முதல் பால் விலை உயர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த- அதிரடி அறிவிப்பால் மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

தமிழகத்தில் ஏற்பட்டுள்ள வறட்சியின் காரணமாக பால் உற்பத்தி தொடர்ந்து குறைந்து வருகிறது. தினமும் 30 லட்சம் லிட்டர் கொள்முதல் செய்து வந்த ஆவின் நிறுவனம், தற்போது நாள் ஒன்றுக்கு 24 லட்சம் லிட்டர் தான் கொள்முதல் செய்கிறது. இவ்வாறு கடந்த 3 மாதத்தில் சுமார் 6 லட்சம் லிட்டர் வரை ஆவின் கொள்முதல் குறைந்துள்ளது.

இந்நிலையில் ரூ.24க்கு பால் கொள்முதல் செய்து வந்த தனியார் நிறுவனங்கள், கொள்முதல் விலையை உயர்த்தி தற்போது ரூ.28க்கு கொள்முதல் செய்யத்தொடங்கின. கொள்முதல் விலை உயர்ந்ததால், பால் விற்பனையை அதிகரிக்க முடிவு செய்தன.

இதையடுத்து தனியார் பால் நிறுவனங்கள் பால் விலையை நாளை முதல் ரூ.2 உயர்த்தி விற்பனை செய்ய முடிவு செய்துள்ளன. இருமுறை சமன்படுத்தப்பட்ட பால் ரூ.36ல் இருந்து ரூ.38 ஆகவும், சமன்படுத்தப்பட்ட பால் ரூ.40ல் இருந்து ரூ.42 ஆகவும், சிறப்பு சமன்படுத்தப்பட்ட பால் ரூ.38ல் இருந்து ரூ.40 ஆகவும், நிலைப்படுத்தப்பட்ட பால் ரூ.48ல் இருந்து ரூ.50 ஆகவும், கொழுப்புசத்து செரிவூட்டப்பட்ட பால் ரூ.52ல் இருந்து ரூ.54 ஆகவும் உயர்கிறது. ஒரு லிட்டர் தயிர் விலை ரூ.50ல் இருந்து ரூ.55 ஆக உயர்த்தப்படுகிறது.

 

Close