மீண்டும் நோக்கியா!

அறிமுகம்:

கை பேசி அறிமுகம் செய்த காலங்களில் Nokia 3310 என்கிற மொபைல் போன் அனைவரையும் கவர்ந்தது. இது வாடிக்கையளர்களுக்கு வரபிரசாதமாக அமைந்திருந்தது.

பல நாட்களாக இது பற்றிய வதந்தி பரவி வந்த நிலையில் நேற்று நோக்கியா நிறுவனதால் அதிகாரப்பூர்வமாக அறிமுகம் செய்யபட்டது.


பேட்டரி பேக் அப்:

அதிக நேரம் இயங்க கூடிய பேட்டரி திறன். செகல்லை ஒப்பிட்டு கூறும் அளவிற்கு இதன் வலிமையும் இதற்கு வாடிக்கையாளர்களின் ஆதரவை மேலும் அதிகபடுத்தியது.

இதன் பேட்டரி சுமார் 22 மணிநேரம் தொடர்ந்து உடயோகிக்கும் திறன் கொண்டுள்ளது.

Nokia 3310 & 1100:

Nokiaவின் சிறந்த அடிப்படை கைபேசியாய் திகழ்ந்த இரு கருவிகளில் இதுவும் ஒன்று. இதோடு Nokia 1100 என்ற கைபேசியும் மக்களால் இன்றும் பேசப்படுகின்றது.

வண்ணங்கள்:

தற்போதைய காலகட்டத்திற்கு ஏற்றார் போல் கருப்பு & வெள்ளையில் இருந்து கலர் திரையாக மாற்றபட்டுள்ளது. கண்கவர் வண்ணங்களில் இதன் புதிய வடிவம் அமைந்திருப்பது வாடிக்கையாளர்களை மேலும் ஈர்த்துள்ளது.


NoKIA 3, 5, 6:

நவீன காலத்திற்கு ஏற்றார் போல Nokia 3, Nokia 5, Nokia 6 என்கிற தொடு திறை Android இயங்குதளத்தால் இயங்க கூடிய புதிய அதி நவீன கைபேசியையும் அறிமுகம் செய்துள்ளது இந்நிறுவனம்.

-அதிரை சாலிஹ்

Close