அதிரையில் கலக்கல் விற்பனையில் தர்பூசனி பழங்கள்!!!

கோடைகாலம் துவங்கவுள்ளதால் அதிரையில் விற்பனைக்காக தர்பூசணி பழங்கள் குவித்து வைக்கப்பட்டுள்ளது.  தமிழகம் முழுவதும் கோடை காலம் துவங்கவுள்ளது. இதனால் அதிரைக்கு தர்பூசணி பழங்கள் விற்பனைக்காக அதிகளவில் கொண்டு வரப்பட்டுள்ளன. கோடை கால வெயில் தாக்கம் அதிகரித்துள்ளதால் அதனை சமாளிக்க  அதிரை மக்கள் தர்பூசனி, வெள்ளரி, இளநீர், மோர், சர்பத் போன்ற குளிர்ச்சியான பொருட்களை அதிகளவில் விரும்புகின்றனர். இந்த மார்ச் முதல் பெப்சி, கோக் உள்ளிட்டவற்றுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால், தர்பூசணி பழங்களுக்கான மவுசு அதிகரித்துள்ளது. அந்த வகையில், அதிரை கடைத்தெருவில் விற்பனை செய்யப்படும் தர்பூசனி பழங்களை மக்கள் ஆர்வமுடன் வாங்கி செல்கின்றனர்.

-file images

Close