அதிரையில் பெரிய கடைகளுக்கு சவால் விடும் சிறுவர் கடைகள்

மிட்டாய் கடை வைத்திருக்கும் சிறுவர்கள் – நெசவு தெரு

அதிரையில்
கடந்த சில நாட்களாக பள்ளிகளில் கோடை விடுமுறை விடப்பட்டுள்ளது. இன்னும் 1 மாதம் கழித்து
தான் பள்ளிகள் திறக்கப்படும். இந்த நீண்ட விடுமுறையில் பள்ளி மாணவர்கள் அவரவர்களுக்கு
பிடித்தமான  பொழுதுபோக்குகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதில்
ஒன்றுதான் சிறுவர்கள் தெருவுக்கு தெரு தங்கள் வீட்டு வாசல்களில் வைத்துள்ள பெட்டிக்கடைளும்,
மோர் கடைகளும், சர்பத் கடைகளுமாகும். வெறும் 100 ரூபாய் முதல் பணத்தில் துவங்கப்படும்
இது போன்ற கடைகளில் கடலை மிட்டாய், பால் கோவா, முறுக்கு போன்ற நொறுக்கு தீணிகளை விற்க்கின்றனர்.
இது
குறித்து பெட்டிக் கடை வைத்திருக்கும் சிறுவன் முஹம்மது யூசுப் கூறியதாவது “நான் சுபுஹ்
தொழுகைக்கு பிறகு மதரசாவிற்க்கு சென்று ஓதி விட்டு வெயிலில் எங்கும் அலைந்து திரியாமல்
வீட்டு வாசலில் இது போன்ற பெட்டி கடையை போட்டுள்ளேன். நான் நிறைய சத்தான திண்பண்டங்களை
இங்கு விற்க்கிறேன், நிறைய பேர் என் கடையில் வந்து வாங்குகிறார்கள், இதனால் எனக்கு
ரொம்ப சந்தோசமா இருக்கு” என்றார்.
இது
போன்று சில மாணவர்கள் இந்த கோடை காலத்திற்க்கேற்ப்ப மோர், சர்பத் போன்ற குளிர்பானங்களை
விற்று வருகின்றனர். “வெளியில் பெரியவர்களிடம் இந்த மோர் வாங்கினால் 10 ரூபாய் எங்களிடம்
வாங்கினால் 5 ரூபாய் தான்” என்கிறார் மோர் கடை போட்டிருக்கும் சிறுவர் ஒருவர்.
எது
எப்படியோ, இந்த கடைகளை கானும் பொழுது நமது மழலை கால நிகழ்வுகள் மீண்டும் தோன்றும் என்பதில்
எந்தவொரு சந்தேகமும் இல்லை.


மோர் கடை வைத்திருக்கும் சிறுவன் – வாய்க்கால் தெரு

பெட்டிக்கடை நடத்திவரும் சிறுவன் – மக்தூம் பள்ளி தெரு

மிட்டாய் கடை வைத்திருக்கும் சிறுவன் – மேலத்தெரு

மோர் கடை வைத்திருக்கும் சிறுவன் – சி.எம்.பி லேன்

சர்பத் கடை நடத்தி வரும் சிறுவர்கள் – மேலத் தெரு

மிட்டாய் கடை வைத்திருக்கும் சிறுவன் – நடுத்தெரு

          

Close