Adirai pirai
posts இந்தியா

ஹல்திராம்ஸ் சோன் பப்டி (Haldirams Soan Papdi)-எச்சரிக்கை!

  இந்தியத் தயாரிப்பான ஹல்திராம்ஸ் உண்ண ஏற்றதல்ல என்று அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து நிர்வாக அமைப்பான எப்.டி.ஏ., தெரிவித்துள்ளது.ஹல்திராம்ஸ் மட்டுமின்றி இந்தியாவில் தயாரிக்கப்பட்ட பல நொறுக்குத்தீனிகள் விற்பனைக்கு தகுதியானதல்ல என்று அமெரிக்காவின் ‘வால் ஸ்ட்ரீட் ஜர்னல்’ பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. மேகி சர்ச்சை இந்தியா மட்டுமின்றி உலக அளவில் உள்ள உணவு பாதுகாப்பு அதிகாரிகள், உணவு பொருட்களை சோதனை செய்யக் காரணமாகியுள்ளது
ரசாயனங்கள் மற்றும் பாக்டீரியாக்கள் அதிகம்:நாக்பூரை தலைமையாக கொண்ட ஹல்திராம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்புகளில் ரசாயனங்கள் மற்றும் பாக்டீரியாக்கள் அதிக அளவில் உள்ளதாக அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இதனை மறுத்துள்ள ஹல்திராம்ஸ் நிறுவனத்தின் உயரதிகாரி ஒருவர் கூறுகையில், “எங்கள் தயாரிப்பு 100 சதவீதம் பாதுகாப்பானது. சில ரசாயனங்கள் இந்தியாவில் அனுமதிக்கப்பட்டுள்ளது. ஆனால் அமெரிக்காவில் அனுமதிக்கப்படுவதில்லை என கூறினார்.

எப்.டி.ஏ., இணையதளத்தில் உள்ள தகவலின்படி, கடந்த 2014-ம் ஆண்டு செப்டம்பர் மாதம்தான் முதன்முறையாக ஹல்திராம்சில் ரசாயனம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அன்று முதல், இன்று வரை 86 முறையாக ஹல்திராம்ஸ் தயாரிப்புகளை இறக்குமதி செய்ய எப்.டி.ஏ., மறுக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது

Courtesy: dinamalar

Advertisement
அதிரையில் குறைந்த மாத தவணையில் வீட்டு மனை பிரிவுகள்

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy