புதிய ரேசன் கார்டுகள் வரும் ஜீன் மாதம் முதல் விநியோகம்

தமிழகத்தில் புதிய குடும்ப அட்டைகள் வருகின்ற ஜுன் மாதம் முதல் விநியோகம் செய்யப்பட உள்ளது.
இதுகுறித்து குடிமைப்பொருள் துறை சார்பில் வெளியான தகவலில்,
”நாடாளுமன்றத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட தேதியில் இருந்து நடத்தை விதி அமலில் இருந்ததால்,
புதிய ரேஷன் அட்டைகள் வழங்கும் பணி நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.
தமிழகத்தில் வாக்குப்பதிவு கடந்த
24 ஆம் தேதி முடிந்த நிலையில்,
நடத்தை விதிகளை தளர்த்தி தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது.
இதையடுத்து, புதிய குடும்ப அட்டைக்கு விண்ணப்பித்தவர்களின் மனுக்களை பரிசீலனை செய்யும் பணி மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது.

அச்சிடும் பணி முடிந்தவுடன் ஜுன் மாதத்தில் புதிய குடும்ப அட்டைகள் வழங்கும் பணி நடைபெறும்”
என்று கூறப்படுகிறது.
தகவல்: நியூஸ் அலை
Close