உம்ராவுக்காக சவூதிக்கு படையெடுத்து வரும் அதிரையர்கள்..!

கோடை காலத்தால் பள்ளி கல்லூரி விடுமுறைகள் விடப்பட்டுள்ளதை முன்னிட்டு
பலரும் ஊட்டி, கொடைக்கானல் போன்ற குளிர் பிரதேசங்களுக்கு சுற்றுள்ள செல்வதற்க்காக பெரும்
பொருட்செலவில் படையெடுத்துக் கொண்டிருக்கும் நிலையில், அதிரை மக்கள் பலர் தங்கள் குடும்பத்துடன்
முஸ்லிம்களின் புனிதஸ்தளமான மக்காவில் இருக்கும் அல்லாஹ்வின் இல்லமான கஃபத்துல்லாஹ்வுக்கு
சென்று உம்ரா சென்று வருகின்றனர்.
இதுகுறித்து சவூதி அரேபியாவில் உள்ள நமது செய்தியாளரிடம் விசாரித்ததில்
அதிரை மக்கள் பலர் தங்கள் குடும்பத்துடனும், தனியாகவும் உம்ரா செய்வதற்க்காக ஊரில்
இருந்து புறப்பட்டு வருகின்றனர் என்றும் இன்னும் பலர் உம்ரா செல்வதற்க்கான முயற்சியில்
ஈடுபட்டு வருவதாகவும் தெரிவித்தார். 
மேலும் சவூதியில் பணியாற்றிவரும் அதிரை சகோதரர்களும்
சிறப்பு விடுமுறைப் பெற்று உம்ராவுக்கு படையெடுத்து வருகின்றனர். இன்னும் அங்கு பணியாற்றும்
சிலர் தங்கள் உறவினர்களைக் பார்த்துவிட்டு அப்படியே அவர்களுடன் உம்ராவும் செய்துவிட்டு
வருகின்றனர்.

அல்லாஹ் அவர்களது இந்த நல் அமலை ஏற்றுக்கொள்வானாக, மேலும் நமக்கும்
இந்த பாக்கியத்தை அல்லாஹ் வழங்குவானாக.
Close