Adirai pirai
articles

இயற்கையின் சுழற்சியை தடுக்கும் மனிதர்கள்! எதிர்நோக்கும் அழிவு!

சுழற்சி…!

இந்த ஒரு விசையினால் தான் இவ்வுலகம் மட்டுமல்ல பிரபஞ்சமே இயங்கிக்கொண்டிருக்கின்றது. இந்த பூமி தானும் சுழன்று, சூரியனையும் சுற்றி வருவதால் தான், இரவும் பகலும், மழையும் வெயிலும் பணியும் காற்றும் எல்லா நாடுகளுக்கும் சரிசமமாக கிடைக்கின்றன.

அதே போன்று விஞ்ஞானத்தின் முதல் கண்டுபிடிப்பான சக்கரத்தை கண்டிபிடித்ததன் பிறகு தான் வாகன பயணம் என்பதை மனிதன் மேற்கொள்ள துவங்கினான். இன்றளவும் எல்லா வாகனங்களும் சுழற்ச்சியின் அடிப்படையிலேயே இயங்கிக் கொண்டிருக்குன்றன.

அதே போன்று இவ்வுலகில் காற்றும் குறிப்பிட்ட வேகத்தில் சுழன்று கொண்டிருகின்றது. அதனால் தான் காற்று அதன் திசைக்கு சுழன்று செல்கிறது. அதன் அடிப்படையில் மலைகளின் மீது மோதி வட கிழக்கு, தென் மேற்கு போன்ற பருவ மழை காலம் உருவாகின்றது. அதன் சுழற்சி நின்றுவிட்டால் பருவ மாற்றம் வராது. மழை பெய்யாது எதுவும் நிகழாது.

காற்றை போன்று நீரும் இவ்வுலகில் சுழன்று கொண்டிருக்கின்றது. மழையில் இருந்து விழும் நீர் நீர்நிலைகளில் தேங்குகிறது. நீர் நிலைகளில் தேங்கிய நீர் வெயிலின் தாக்கத்தால் நீராவியாகி அது மேகமாகின்றது. பின்னர் மழை பெய்கின்றது.

அதே போல், தற்போது உலகில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரமும் சுழற்சியை அடிப்படையாக வைத்தே கிடைக்கின்றது. ஜெனரேட்டர் சுற்றுவதன் மூலம் மின்சாரத்தை உற்பத்தி செய்ய முடியும். இதன் அடிப்படையிலேயே காற்றாலை மின்சாரமாக இருந்தாலும் சரி, Hydraulic power production எனப்படும் நீர் நிலைகளில் இருந்து உற்பத்தி செய்யப்படுகிறது. அதுமட்டுமா, அணு உலை கூட ஜெனரேட்டரை சுற்றுவதன் அடிப்படையிலேயே மின்சாரம் உற்பத்தியாகிறது. ஆம் மிக மிக நுண்ணிய அளவுடைய யுரேனியம் அணுவை பிளப்பதன் மூலம், ஏற்படும் வெப்பம் நீரை நீராவியாக்கி அதன் மூலம் ஜெனரேட்டரை சுழன்று மின்சாரம் உற்பத்தியாகின்றது.

இதை போன்று மண் சுழற்ச்சியாவதால் தான் நம் மண் எப்போதும் உயிற்புடன் உள்ளது. இதற்கு மண் புழு மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. 

அதே போன்று நம் உடம்பில் உள்ள இரத்தம் சுழற்சியின் அடிப்படையிலேயே இயங்கிக்கொண்டிருக்கின்றது. தனை ரத்த நாளங்கள் வழியாக பம்ப் செய்து உடல் உறுப்புகளுக்கு அனுப்புவதே இதயத்தின் பயன்பாடு இருந்து வருகின்றது. 

அதே போன்று உணவு சுழற்சியும் (FOOD CYCLE) உள்ளது. ஆம், உலகில் உள்ள உயிரிணங்கள், தாவர உண்ணிகள்(Herbivores), மாமிச உண்ணிகள்(Carnivores), தாவரங்கள் மற்றும் மாமிசங்களை உண்ணும் உயிரிணங்கள்(Omnivores) ஆகியவை உள்ளன. தாவரங்களை கால்நடைகள் உண்ணுகின்றன. கால்நடைகளை மனிதர்களும், வன விலங்குகளும் உண்கின்றனர். இப்படிதான் உணவு சுழற்சி நடைபெறுகிறது. இது தான் இயற்கை. ஆனால் இயற்கைக்கு புறம்பாக தற்போது ஆடு மாடுகளை உண்ணக்கூடாது என உத்தரவு பிறப்பிக்கப்பட்டு வருகிறது. இதனால் உபியில் மிருக காட்சி சாலையில் புலிகளுக்கு உணவுகள் இல்லை.

உபி அரசின் கட்டுப்பாட்டால் சுழற்சி என்பது ஒரு இடத்தில் முடங்கிப்போய் நிற்கும். இயற்கையின் சுழற்சியை தடுப்பதன் மூலம் பெரும் விளைவுகளை உத்திர பிரதேசம் விரைவில் சந்திக்கும்.

-நூருல் இப்னு ஜஹபர் அலி