இன்றுடன் நமதூரை விட்டு பிரியாவிடைபெறுகிறார் ஹாஜி சார்

அதிரை காதிர் முகைதீன் பள்ளியில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக ஆசிரியப் பணியை மிகச் சிறப்பாக செய்து வந்துக்கொண்டிருந்த முதுகலை ஆசிரியர் ஹாஜி முஹம்மது சார் அவர்கள் இன்றுடன்  பணி ஓய்வு பெறுகிறார்.
இதனை அடுத்து அவருக்கு பிரியா விடை கொடுக்கும் விதமாக அப்பள்ளி ஆசிரியர்கள் சார்பாக ஒரு நிகழ்ச்சிக்கு ஏற்ப்பாடு செய்யப்பட்டது. தலைமை ஆசிரியர் மஹ்பூப் அலி அவர்களின் தலைமையில் இன்று மாலை நடைப்பெற்ற இந்த நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட ஆசிரிய ஆசிரியைகள் ஹாஜி சார் அவர்களுடன் தாங்கள் பணியாற்றிய நெகிழ்ச்சியான அனுபவங்களைப் பகிர்ந்துக்கொண்டனர்.
இதில் கலந்துக்கொண்ட பல ஆசிரியர்கள் ஹாஜி சார் அவர்களின் மாணவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இதில் தலைமை ஆசிரியர் மஹ்பூப் அலி அவர்கள் ஹாஜி சார் அவர்களுக்கு பொன்னாடை போற்றி கவுரவித்தார்கள்.
இறுதியாக உரையாற்றிய ஹாஜி சார் அவர்கள் தன்னுடைய முழு வரலாற்றையும், இப்பள்ளியில் பணியாற்றிய அனுபவங்களைப் பற்றியும், ஆசிரியர்களைப் பற்றியும், அதிராம்பட்டினத்தைப் பற்றியும் நெகிழ்சியுடன் உரையாற்றினார்கள். இதை கேட்ட அனைவருக்கும் கண்ணில் கண்ணீர் வரும் அளவுக்கு இருந்தது உரை.
நானும் அவருடைய மாணவன் என்ற முறையில் பல ஆண்டுகாலமாக அதிரை மக்களுக்கு கல்விச்சேவையாற்றிய அவருடைய இம்மை மறுமை நலனுக்காக பிரார்த்திப்பதோடு அல்லாஹ் அவர்களுக்கு இனி வரும் காலங்களை பொன்னான காலமாகவும், நோய் நொடியில்லாமல் நல்ல சுகத்துடன் வாழ துஆ செய்வோம்..


Close