ஊர் காவல் படையில் பணியாற்றும் முதல் அதிரை இளைஞர் !
அதிராம்பட்டினம் ஆசாத் நகரை சேர்ந்த நூர் முகமது இவர்களின் மகனார் N.A. ரில்வான் அஹமது அவர்கள் ஊர் காவல் படையில் தேர்வாகி . ஒன்றரை கால மாதம் பயிற்சி முடிந்தது. தற்போது இவர் தஞ்சாவூரில் நான்கு நாட்கள் பணியாற்ற உள்ளார் . ஊர் காவல் படையில் பணியாற்றும் முதல் அதிரை இளைஞர் இவர்தான் . இதில் அதிராம்பட்டினம் , பட்டுக்கோட்டை , சம்பை , மல்லிப்பட்டினம் , மட்டும் அருகில் உள்ள ஊர்களில் இருந்து பல இளைஞர்கள் சென்றனர் . இதில் மொத்தம் 100 பேர் தேர்வாகினார்கள் .இதில் ஒரே முஸ்லிம் இளைஞர் இவர்தான் என்பது குறிப்பிடப்பட்டது . இவர் இன்னும் மென்மேலும் உயர் பதவிக்கு செல்ல அதிரை பிறை சார்பாக வாழ்த்துக்கள் .
குறிப்பு : இந்த பதிப்பு அதிரை இளைஞர்களை ஊக்குவிக்கும் விதமாக பதியப்பட்டது. இவர் போல் இன்னும் பல அரசு துறையில் நம் முஸ்லிம் இளைஞர்கள் பணியாற்ற வேண்டும் .