அதிரையில் சிறப்பாக நடைபெற்ற கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி!(படங்கள் இணைப்பு)

அதிரை இளைஞர்கள் மற்றும் Terri Wear இணைந்து நடத்திய கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி இன்று (08-05-2015) வெள்ளிக்கிழமை மாலை 4.30 மணியளவில் லாவண்யா திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சிக்கு துவக்கமாக கிராத் இமாம் ஷாபி பள்ளி மாணவன் பிலால் ஓதினார்.வரவேற்புரை மற்றும் அறிமுக உரை  காதிர் முகைதீன் கல்லூரி பேராசிரியர்.செய்யது அஹ்மத் கபீர் அவர்கள் நிகழ்த்தினார்கள். இந்நிகழ்ச்சிக்கு தலைமையுரையினை காதிர் முகைதீன் கல்லூரி முன்னாள் முதல்வர் மதுக்கூர் A.முகம்மது அப்துல் காதர் அவர்கள் நிகழ்த்தினார்கள்.

இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட திருச்சி காவேரி மகளிர் கல்லூரி பேராசிரியை M.ஆசியதாரா M.A.,M.Phil.,Ph.D., அவர்கள் பல்வேறு படிப்புகள் குறித்தும் வேலைவாய்ப்பு குறித்தும் உரையாற்றினார்கள்.இதனைதொடர்ந்து  ACCESS INDIA COUNSELLOR வழக்கறிஞர் Z.முஹம்மது தம்பி B.A.,B.L., அவர்கள் மாணவர்களுக்கு ஊக்குவிப்பு வகுப்புகள் எடுத்தார்கள்.

முன்னதாக இந்நிகழ்ச்சியில் காதிர் முகைதீன் பள்ளி தலைமையாசிரியர் மகபூப் அலி அவர்கள் வாழ்த்துரை நிகழ்த்தினார்கள்.இதனைதொடர்ந்து இந்த வருடம் அதிரை அளவில் முதல் நான்கு இடம் பிடித்த மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.இந்நிகழ்ச்சியின் சிறப்பு அழைப்பாளர்களுக்கும் நினைவு பரிசுகள் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியினை காலித் அஹ்மத் அவர்கள் தொகுத்து வழங்கினார்.

இறுதியாக நன்றியுரை Terri Wear உரிமையாளர் இப்ராகிம் அவர்கள் நிகழ்த்தினார்கள்.இந்நிகழ்ச்சிக்கு மாணவ-மாணவிகள், ஆசிரியர்கள், கல்லூரி பேராசிரியர்கள், பெற்றோர்கள்,அதிரை இணையதள நிர்வாகிகள், பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.    

Advertisement

Close