Adirai pirai
posts

மல்லிப்பட்டினத்திற்கு மீண்டும் வருவேன், பா.ஜ.க வேட்பாளர் கருப்பு

மல்லிப்பட்டினத்தில் நேற்று முன்தினம் பா.ஜ.க வேட்பாளர் கருப்பு வாக்கு சேகரிக்கும் பொழுது வெடித்த கலவரம் நாம் அறிந்ததே. இது குறித்து பா.ஜ.க வேட்பாளர் கருப்பு  பத்திரிக்கையாளர்களிடம் அளித்த பேட்டியில் தன்னுடைய கருத்துக்களை கூறியிருந்தார்.  

இதனை அடுத்து  அவர் கூறியுள்ளதாவது..
 “மல்லிப்பட்டினத்தில் அன்று நடந்த கலவரம் காரணமாக நான் வண்டியை திருப்பிக்கொண்டு சேதுபாவா சத்திரம் சென்றுவிட்டேன் இதனால் மல்லிப்பட்டினம மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் தேர்தல் பிரச்சாரம் செய்வது தடைப்பட்டது. இதனால் மற்றொரு நாள் அந்த பகுதிகளில் தேர்தல் பிரச்சாரம் செய்வேன்” எனக் கூறியுள்ளார்.