குவைத் வாழ் அதிரையர்களுக்கு ஓர் முக்கிய அறிவிப்பு

அதிரையை சேர்ந்த பலர் வளைகுடா நாடுகளில் ஒன்றான குவைத்தில் பணி நிமித்தமாக தங்கியுள்ளனர். இந்த நாட்டில் தற்பொழுது சட்டங்கள் கடுமையாக்கப்பட்டு வருவதுடன் அங்கு உள்ள அயல் நாட்டாவர்கள் மீதும் தாங்கள் கண்காணிப்பை செலுத்தியுள்ளனர்.
குவைத் அரசாங்கத்தினர் காதிம் மற்றும் இகாமா இல்லாதவர்களை சொந்த நாட்டிற்கு வலுகட்டாயமாக அனுப்பிவிடுகின்றார்களாம். இந்த பணி குவைத் அரசாங்கத்தால் முடுக்கிவிடப்பட்டுள்ளது. 
பாஸ்போர்ட், சிவில் ஐ.டி, இகாமா போன்ற முக்கிய ஆவணங்களை அந்த நாட்டு போலிஸார் பரிசோதித்து வருகின்றனர். எனவே அந்நாட்டில் வசிக்கும் நம்மவர்கள் தங்களுடைய முக்கிய ஆவணங்களை பாதுகாப்பாக வைத்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறொம்.
Close