அப்பப்பப்பப்பப்பா என்னா வெயிலு !

நம்ம ஊர்ல கடந்த ரெண்டு மாசமா வெய்லு வாட்டி வதைக்குதுண்டு நம்ம ஊரில் எல்லாருக்குமே தெரியும். அது மட்டுமில்லாம நேற்று நம்ம மாவட்டத்துல மட்டுமே சென்சுரி பொட்டுருச்சு. என்னடா இவன் கிரிக்கெட்ல சென்சுரி பொட்டமாரி சொல்ரானே எதைப்பற்றி சொல்றான், ஒன்னுமே புருயலய….. என்னா குழப்பமா இருக்கா ! 

இதுல குழப்புரதுக்கு என்னங்க இருக்கு…. நேற்று நம்ம தஞ்சை மாவட்டத்துல மட்டுமே 101 டிக்ரி வெயிலு அடிச்சுருக்கு. ஆரம்பமே இப்புடி வெயிலு அடிச்சா இன்னும் மூன்று, நான்கு மாசம் வெயிலு அடிக்க வேண்டியதிற்க்கு, அப்போ என்னா மாதிரியான வெயிலு அடிக்க போகுதுண்டுத் தெரியல!… என்னா படிக்கும்போதே ஐஸ் வாட்டர கடகட கடகடண்டு குடிக்க சொல்லுதா….

ஆமா… ஆமா… இங்க குளிக்கிரதுக்கே வாட்டரில்ல.. இதுல குடிக்கிரதுக்கு ஐஸ் வாட்டரா..

அது மட்டுமில்லாம நம்ம ஊரு பசங்களுக்கு ஸ்கூல் லீவு விட்டா போதுமே…. இந்த சென்சுரிப் போட்ட வெயிலுல நின்றுக்கொண்டு, ஆட்டம் பாடம் கொண்டாட்டம்ண்டு, சும்மா காஞ்சி கருவாடா போயிருவாங்க…. 

இந்த வெயிலினால் ஏற்ப்படும் நோய்கள் பலவிதம். ஆகையால், தாங்கள் இந்த சென்சுரிப் போட்ட வெயிலிடமிருந்து….. உஷாரா இருக்க வேண்டும். 

                                                       

                                          ஆக்கம்: இர்ஷாத் அஹமது
                                                                 (அதிரைபிறை)
Close