Adirai pirai
posts

அதிரையில் வரலாறு காணாத அளவில் தண்ணீர் பஞ்சம் (SHORT FILM)

நமதூரில் மாறி வரும் கால நிலை, தாங்கமுடியாத வெயிலின் வாட்டம், நிலத்தடி நீர் குறைப்பாடு, சுகாதார சீர்கேடு, சுகாதாரம் பற்றி மக்களிடம் விழிப்புணர்வு இல்லாமை, தவிர்க்க முடியாத கால்வாய் பிரச்சனை, இவை யாவும் தான் எங்களை இந்த பதிவை எழுத தூண்டியது. 

கடந்த பத்து வருடங்களை எடுத்துக்கொண்டால் அதிராம்பட்டினம் எண்ணில் அடங்காத வளர்ச்சியை கண்டுள்ளது என்பது மறக்கமுடியாத உண்மை. இவை ஒரு பக்கம் இருக்க இந்த வளர்ச்சியால் நமதூருக்கு கிடைத்த நன்மைகள் பல என்றாலும் அதற்க்கு நிகராக தீமைகளும் இருக்கவே செய்கின்றன. உதாரணத்திற்க்கு வைத்துக்கொண்டால் நமதூரில் அண்மை காலமாக நிலவி வரும் தண்ணீர் பற்றாகுறை ஒரு சான்று, இதற்க்கு என்னதான் தீர்வு என்பது ஒருபக்கம் இருக்க இதற்க்கு காரணம் என்ன என்பதை நாம் ஆராய்ந்தால் தெரியும். இதற்க்கு முக்கிய காரணமே விஞ்ஞான வளர்ச்சியை அளவுக்கு அதிகமாக தேவையின்றி நாம் பயன்படுத்தியது என்பதே காரணம். ஆம் முன்பெல்லாம் நெடுந்தூரம் நடந்து குளர்த்திற்க்கும் ஏரிக்கும் நடந்து சென்று தண்ணீரை எடுத்து வந்தனர் மக்கள், அதனால் அந்த கஷ்டத்தை புரிந்துக்கொண்டு தண்ணீரை சிக்கனமாக செலவு செய்தனர்.
 ஆனால் இப்பொழுது அப்படியா..! ஸ்விட்ச்சை ஒரு அமுக்கு அமுக்கினால் ஒருவாரத்திற்க்கு தேவையான தண்ணீர் நம் வீட்டு தண்ணீர் தேக்கத் தொட்டியில் ஐந்து நிமிடத்தில் நிரம்பிவிடும் இதனால் நமக்கு தண்ணீரின் அருமை தெரியாமல் இஷ்டத்துக்கு செலவு செய்கிறோம். சரி முன்பெல்லாம் வாய்க்காள்களிலாவது ஓரளவு தண்ணிர் வந்துகொண்டிருந்தது அதையும் குப்பைகளை போட்டு மூடிவிட்டோம்.

விளைவு……..தண்ணீர் தட்டுப்பாடு

 குடிநீரை விலை கொடுத்து வாங்கும் அவலம். இதையே நம்மால் தாங்க முடியவில்லை என்றால் வரும் காலங்களை யோசித்துப் பாருங்கள், தண்ணீரை பெட்ரோல், டீசல் போன்று பங்குகளில் விலை கொடுத்து அளந்து வாங்கக்கூடிய நீலை வரக்கூடும் என்ற அச்சம் இப்பொழுது நடக்கும் நிகழ்வுகளை கண்டால் நமக்கு தோன்றுகிறது. 
அதிரையின் நிலை
அதிரையை எடுத்துக்கொண்டால் கடந்த ஒரு மாததிற்க்குள் காலம் காலமாக வற்றாத குளங்களாக கருதப்படும் ஆஸ்பத்திரி தெரு குளம்,  சின்ன தைக்கால் குளம் ஆகிய குளங்கள் வற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது. அது மட்டும் இல்லை கடந்த சில நாட்களாக மிகவும் அதிர்ச்சிகரமான செய்தி என்னவென்றால் நமதூரின் பல பகுதிகள் நிலத்தடி நீர் 200 அடிக்கும் கீழே சென்று விட்டதாம். அது மட்டும் இல்லாமல் முன்பு 150 அடிக்கு போர் போட்ட வீட்டில் எல்லாம் இப்பொழுது தண்ணீர் வருவதில்லையாம், அதனால் இப்பொழுது பல வீடுகளில் நீர் மூழ்கி போர் அமைக்கும் பணி நடைப்பெற்று வருகிறது. 
நமதூரில் திடீர் என்று நிலவி வரும் இந்த அவல நிலைக்கு யார் காரணம். 
இது நமக்கு தேவையா? 
இறைவன் நமக்கு வழங்கிய அருட்கொடையை சரியாக பயன்படுத்தாமல் இருந்ததன் விளைவு தான் இது என்பது மறுக்க முடியாத உண்மை. ஏற்கனவே நம் ஊரின் முக்கிய நீர் ஆதரங்களான குளங்கள் அனைத்தும் சிறுவர்களின் விளையாட்டுத் திடலாகவும், கழிவு நீர் தேங்கும் இடமாகவும் மாறியுள்ளது குறிப்பிடத்தக்கது. 
வருங்காலத்தில் தண்ணீர் பஞ்சம் எந்த அளவுக்கு தாக்கத்தை ஏற்ப்படுத்துகிறது என்பது குறித்த ஒரு குறும்படம்