தஞ்சை தொகுதி திமுக, காங்கிரஸ், ஆம் ஆத்மி கட்சிகள் இன்று வேட்பு மனு தாக்கல்

தஞ்சாவூர் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் திமுக, காங்கிரஸ், ஆம் ஆத்மி கட்சிகள் இன்று வேட்பு மனு தாக்கல் செய்கின்றன.
இந்த மக்களவைத் தொகுதியில் ஏற்கெனவே அதிமுக, பாஜக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் உள்பட 13 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர். வேட்பு மனு தாக்கல் சனிக்கிழமையுடன் (ஏப்.5) முடிவடையவுள்ளது.
இந்நிலையில், திமுக வேட்பாளர் டி.ஆர். பாலு, காங்கிரஸ் வேட்பாளர் து. கிருஷ்ணசாமி வாண்டையார், ஆம் ஆத்மி கட்சி வேட்பாளர் பழனிராஜன் ஆகியோர் வெள்ளிக்கிழமை வேட்பு மனு தாக்கல் செய்யவுள்ளனர்.
இதனால், மாவட்ட ஆட்சியரகத்தில் பலத்த பாதுகாப்பு அளிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
Close