தஞ்சையில் வேட்புமனு தாக்கல் செய்த அ.தி.மு.க, பா.ஜ.க மற்றும் கம்யூனிஸ்ட் வேட்பாளர்கள்

தஞ்சை பாராளுமன்ற தொகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு சார்பில் தமிழ்ச்செல்வி போட்டியிடுகிறார். இவர் கடந்த 2ம் தேதி காலை 12:00 மணியளவில் தஞ்சை கலெக்டர் சுப்பையன் அவர்களிடம் வேட்புமனு தாக்கல் செய்தார். இவருக்கு மாற்று வேட்பாளராக அக்கட்சியை சேர்ந்த மாலதி அவர்களும் வேட்புமனு தாக்கல் செய்தார்.

இதற்க்கு முன்னதாக கலெக்டர் அலுவலகத்துக்கு வந்த தஞ்சை பா.ஜ.க கட்சியின் வேட்பாளர் கருப்பு எ.முருகானந்தம் அவர்கள் காலை 11:30 மணியளவில் வேட்புமனு தாக்கல் செய்தார். இவருக்கு மாற்று வேட்பாளராக அக்கட்சியை சேர்ந்த ஞானம்.ரவிச்சந்திரன் அவர்கள் வேட்புமனு தாக்கல் செய்தார்.
மார்ச் 1ம் தேதி அ.தி.மு.க வேட்பாளர் கு.பரசுராமன் வேட்புமனுவை தாக்கல் செய்தார். 2ம் தேதி அவருக்கு மாற்று வேட்பாளராக பரசுராமன் அவர்களின் மனைவி விஜயலட்சுமி அவர்களும் மாவட்ட கலெக்டர் அவர்களிடம் தன்னுடைய வேட்புமனுவை தாக்கல் செய்தார்.
Close