அதிரையில் தீவிரமாக வாக்குகள் சேகரித்த டி.ஆர்.பாலுதஞ்சை நாடாளுமன்ற தொகுதி தி.மு.க வேட்பாளர் டி.ஆர்.பாலு அவர்கள் இன்று அதிரையில்  ஏரிப்புறக்கரை ஊராட்சிக்கு உட்பட்ட பிலால் நகர் மற்றும் M.S.M நகர் ஆகிய பகுதிகளில் இரவு 8:30 மணியளவில் தி.மு.க சார்பாக போட்டியிடும் தனக்கு ஆதரவு கோரினார்.
இதற்க்கு முன்னதாக இராஜாமடம், ஏரிப்புறைக்கரை ஆகிய ஊர்களில் பிரச்சாரம் செய்தார். அதிரையில் தேர்தல் பிரச்சாரத்தை முடித்த அவர் நடுவிக்காடு ஊராட்சி பகுதியில் வாக்குகள் சேகரித்து வருகிறார்.
இதில் ஏராளமான அதிரை மக்களும், தி.மு.க, முஸ்லிம் லீக், ம.ம.க மற்றும் SDPI கட்சி தொண்டர்கள் என பலர் கலந்துக்கொண்டனர்.

Close