இந்திய அரசியல் தலைவர்கள் ஒரு பார்வை – நரேந்திர மோடி

பிறப்பு:
நரேந்திர தாமோதரதாசு மோடி (பி. செப்டம்பர் 17, 1950) பாரதிய ஜனதா கட்சியின் ஒரு முக்கிய அரசியல்வாதியாவார். இவர் அக்டோபர் 7,2001 இல் இருந்து குசராத்து மாநிலத்தின் முதல்வராக பதவி வகித்து வருகிறார்.
குடும்பம்:
நரேந்திர தாமோதர்தாசு மோதி ஒரு நடுத்தர பொருளாதார வசதிபடைத்த குடும்பத்தில் வடநகர் என்னும் இடத்தில் பிறந்தார், அவர் தாமோதர்தாசு முல்சந் மோதி மற்றும் அவரது மனைவி ஃகீரபேன்னுக்கும் பிறந்த ஆறு குழந்தைகளில் இவர் மூன்றாவதாக பிறந்தார். 
அரசியல் வாழ்க்கை:
இவர் குழந்தை பருவத்திலிருந்து ராஷ்டிரிய சுயம்சேவாக் சங்கம் (RSS) ஒரு உறுப்பினராகவும் உள்ளார், இளமை முதல் அரசியலில் ஆர்வம் கொண்டவர். இவர் 1998 ஆம் ஆண்டில் அரசியல் அறிவியல் முதுகலை பட்டம் பெற்றுள்ளார். இவர் குசராத்து மாநிலம், இமாசல பிரதேச தேர்தல் பிரச்சாரங்களில் இயங்க அத்வானியால் தேர்வு செய்யப்பட்டார்.
அப்போதைய முதல்வர் கேசுபாய் பட்டேல் பதவி விலகியதை அடுத்து நடந்த இடைத் தேர்தலில் நரேந்திர தாமோதர்தாசு மோதி வெற்றிபெற்றுஅக்டோபர் 7, 2001 ல் குசராத்தின் முதல்வர் ஆனார். இவர் தன் பதவிக்காலத்தை அக்டோபர் 7, 2001 தொடங்கி சூலை, 2007 வரை இருந்தார். பின் திசம்பர் 23, 2007 தேர்தலில் மறுபடியும் வெற்றிபெற்று ஆட்சியை தொடர்ந்தார். இவர் தொடர்ந்து 2063 நாட்கள் முதல்வர் பதவியில் இருந்து குசராத்து வரலாற்றில் சாதனை படைத்துள்ளார்.
தற்போதைய அரசியல்:
2014ம் ஆண்டு 16ஆம் மக்களவைத்தேர்தலில் பாரதீய சனதா கட்சி முதன்மையேற்கும் தேசிய சனநாயகக் கூட்டணியின் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
மோதி ராஷ்டிரிய சுயம்சேவாக் சங்கத்தின் உறுப்பினராக இருந்துள்ளார். ஊடகங்களும் அறிஞர்களும் இவரை இந்து தேசியவாதியாகவிவரிக்கின்றனர். இக்கூற்றை இவரும் ஏற்றுக் கொண்டுள்ளார். இந்தியாவிற்குள்ளும் பன்னாட்டளவிலும் மிகுந்த சர்ச்சைகளுக்குட்பட்ட மனிதராக மோதி உள்ளார். இவரது ஆட்சி 2002ஆம் ஆண்டு குஜராத்து வன்முறைக்காக மிகக் கடுமையாக சாடப்பட்டுள்ளது. 
குசராத்தில் மிக விரைவான பொருளியல் வளர்ச்சிக்கான சூழலை உருவாக்கியதாக இவரது பொருளியல் கோட்பாடுகள் பரவலானப் பாராட்டுக்களைப் பெற்றுள்ளன. இருப்பினும், இவரது ஆட்சி குறிப்பிடத்தக்க மனிதவளர்ச்சி கூறுகளில் நேர்மறை தாக்கம் எதுவும் ஏற்படுத்தவில்லை என்றும் குறைகாணப்படுகிறது.

நாளை காங்கிரஸ் கட்சியின் பிரதமர் வேட்பாளர் எனக் கூறப்படும் ராகுல் காந்தி அவர்களின் வாழ்கை வரலாற்றை பார்ப்போம்.
-wikipedia
Close