அதிரையில் கடலை சுருளுக்கு பயன்படுத்தப்படும் குர்ஆன் தாள்கள், ஓர் அதிர்ச்சி தகவல்!

 அதிரையில் கடலைக்கு சுற்றப்படும் சுருள் தாளாக குர்ஆன் காகிதங்கள் உபயோக்கிக்கப்படுகிறது.
அதிரை சேர்ந்த நபர் ஒருவர் இன்று ஒரு கடலை வண்டி வியாபாரியிடம் கடலை வாங்கியுள்ளார். அதை திண்பதற்க்கு சுருளை பிரித்த அவர் அந்த சுருளுக்கு குர்ஆன் காகிதங்கள் உபயோகிக்கப்பட்டிருப்பது கண்டு அதிர்ச்சியடைந்தார். அந்த காகிதத்தில் குர்ஆன் யாசின் வசனத்தின் தர்ஜூமா பிரதி உள்ளது. 
இது குறித்து அந்த கடலைக்காரரிடம் இவர் கேட்டதில் அதிர்ச்சிகரமான தகவல் வெளியானது.
அவர் இந்த காகிதங்களை பழைய இரும்புக் கடையில் வாங்கியதாகவும் அந்த காகிதம் தர்ஜுமா என்றதால் தனக்கு தெரியவில்லை என்றும் கூறினார். மேலும் தெருவில் வரும் பழைய இரும்பு வியாபாரிகளிடம் சொர்ப்ப காசுக்காக அல்லது ஒரு பொருளுக்காக வீட்டில் குர்ஆன் போன்ற இஸ்லாமிய கிதாபுகளை கொடுத்து விடுகின்றனர் என்றும் இது போன்று பல குர்ஆன்கள் கட்டுக்கட்டாக நமதூர் பழைய இரும்பு கடைகளில் கிடப்பதாகவும் கூறினார்.
மக்களே…! சொர்ப பணத்துக்காக, அல்லது ஒரு சாதாரண ஒரு பொருளுக்காக அல்லாஹ்வின் மேலான மேன்மைக்குறிய குர்ஆனை இது போன்ற பழைய இரும்பு வியாபாரிகளிடம் வழங்குவதை தவிர்த்துக் கொள்ளுங்கள்.
தங்கள் வீடுகளில் இது போன்று பழைய குர்ஆன்கள் அல்லது திருமறை வசனங்கள் உபயோகப்படாமல் இருந்தால் முடிந்த அளவு அதை வைத்து பாதுகாத்துக் கொள்ளுங்கள். தவிர்க்க முடியாத சூழலில் அதை என்ன செய்வது என்று உலமாக்கள் கூறும் முறைகள்..
1. கிணறு, ஆறு, கடல் போன்றவற்றில் போட்டுவிடுவது.
2. அல்லது கால் படாத இடத்தில் பள்ளம் தோண்டி புதைத்து விட வேண்டும்.
Close