தி.மு.க.விலிருந்து மு.க.அழகிரி நிரந்தரமாக நீக்கப்பட்டார் !

             

                     தி.மு.க.விலிருந்து மு.க.அழகிரி  அறவே நீக்கப்பட்டுள்ளதாக தி.மு.க
அறிவித்துள்ளது. முன்னதாக முன்னாள் மத்திய அமைச்சரான அழகிரி தற்காலிகமாக
தி.மு.க.விலிருந்து நீக்கப்பட்டிருந்தார். அழகிரி நிரந்தரமாக
தி.மு.க.விலிருந்து நீக்கப்பட்ட தகவலை கட்சித் தலைவர் கருணாநிதி
தெரிவித்துள்ளார். இது குறித்து தகவல் தெரிவித்த அவர், அழகிரியை
தற்காலிகமாக நீக்கி வைத்து அவர் மீதான புகார் குறித்து விளக்கம்
கேட்கப்பட்டிருந்தது. ஆனால் அழகிரி விளக்கம் தராதது மட்டுமின்றி தொடர்ந்து
திமுகவை விமர்சித்தும் வந்தார். இதனையடுத்து கட்சியிலிருந்து அழகிரி
நிரந்தரமாக நீக்கப்படுவதாக கருணாநிதி அறிவித்தார்.

Close