Adirai pirai
posts

அதிரையில் தொடரும் மின்வெட்டு, மக்கள் அவதி

கடந்த சில மாதங்களாக நமதூர் உட்பட தமிழகம் முழுவதும் மின்சாரம் சீரான முறையில் வினியோகிக்கப்பட்டு வந்தது. தற்பொழுது சில நாட்களாக நமதூரில் ஒரு நாளைக்கு 10 தடவைக்கும் மேலாக மின்சாரம் துண்டிக்கப்படுகிறது. நாள் ஒன்று 6 மணி நேரத்திற்க்கும் மேலாக மின்சாரம் இல்லாததால் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர். 
காலையிலேயே மின்சாரம் தடைபடுவதால் தண்ணீர் ஏற்றுவதற்க்கு கூட மக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். வெயில் காலம் வேறு துவங்கியுள்ளதால் வீட்டில் உள்ளவர்களையும் வியர்வையில் குளிக்க வைக்கிறது இந்த மின் வெட்டு.
“எங்களுக்கு வெயில் நேரத்துல தான் வியாபாரமே ஓடும், இதுல இவங்க கரண்ட வேற கட் பண்ணிட்டா நாங்க பொளப்புக்கு என்னா பண்ணுரது” என்கிறார் ஜீஸ் கடை வியாபாரி ஒருவர்.
மேலும் இந்த மின் வெட்டால் பலரின் வியாபாரம் கேள்விக்குறியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. தற்பொழுது பத்தாம் வகுப்பு தேர்வு வேறு இன்னும் சில நாட்களில் துவங்க உள்ளதால் மாணவர்களும் இரவு நேரங்களில் படிப்பதற்க்கு கஷ்டப்படுகின்றனர். இது குறித்து யாரவது அதிரை மின்சார வாரியத்திடம் தொடர்பு கொண்டால் அவர்களிடம் இருந்து சரியான விளக்கம் இல்லை என்று கூறுகின்றனர் மக்கள்.
பொதுமக்கள், வியாபாரிகள், மாணவர்கள் ஆகியவர்களின் நலன் கருதி மின் வெட்டு நேரத்தை குறைத்துக்கொள்ளுமாறு அதிரை பிறை சார்பாக கேட்டுக்கொள்கின்றனர்.
பொதுநலம் கருதி பதிவோர்,
அதிரைபிறை.இன்