அதிரையில் நடைப்பெற்ற நாஞ்சில் சம்பத் அவர்களின் தேர்தல் பிரச்சாரத்தில் பலர் பங்கேற்ப்பு..!

 இன்று மாலை 5:30 மணியளவில் அதிரை பேருந்து நிலையம் அருகில் அ.தி.மு.க வின் தஞ்சை நாடாளமன்ற தொகுதி வேட்பாளர் திரு.பரசுராமன் அவர்களை ஆதரித்து அ.தி.மு.க வின் கொள்கை பரப்புச் செயளாலர் திரு. நாஞ்சில் சம்பத் அவர்கள் தேர்தல் பிரச்சாரம் செய்தார்கள். 
இதில் உரையாற்றிய அவர் தமிழகத்துக்கு அ.தி.மு.க அரசு செய்துள்ள நலதிட்டங்களை பட்டியளிட்டும், கடந்த காங்கிரஸ், தி.மு.க ஆட்சிகளையும் எடுத்துக்கூறி வாக்குகள் சேகரித்தார். இந்த கூட்டத்தில் அதிரை அ.தி.மு.க மற்றும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் நிர்வாகிகள், மற்றும்  பொதுமக்கள் பலர் கலந்துக்கொண்டனர்.

Close