அதிரையில் நடைபெற்ற மு.க.ஸ்டாலின் அவர்களின் தேர்தல் பிரச்சாரத்தில் பலர் பங்கேற்ப்பு

அதிரையில் வரும் நாடாளமன்ற தேர்தலுக்கு தி.மு.க தலைமையிலான கூட்டனியை ஆதரித்து தி.மு.க கட்சியின் பொருளாளர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தேர்தல் பிரச்சாரம் செய்தார். இந்த கூட்டத்தில் அதிரை தி.மு.க, ம.ம.க, முஸ்லிம் லீக், விடுதலை சிறுத்தை ஆகிய கட்சியை சார்ந்த தொண்டர்களும், அதிரை பொதுமக்களும் கலந்துக்கொண்டனர்.
முன்னதாக தி.மு.க கூட்டனியை ஆதரித்து முஸ்லிம் லீக் ஹாஜா அவர்களும், அதிரை பேரூராட்சி தலைவர் அவர்களும் உரை நிகழ்த்தினார்கள்
மாலை 6:50 மணியளவில் நமதூர் பேருந்து நிலையத்திற்கு வருகை தந்த மு.க.ஸ்டாலின் அவர்கள் கடந்த தி.மு.க ஆட்சியின் சாதனைகளை விளக்கி தஞ்சை நாடாளமன்ற தொகுதி வேட்பாளர் திரு.டி.ஆர். பாலு அவர்களை ஆதரித்து வாக்குகள் சேகரித்தார். அதிரை வழிநெடுகிளும் சூழ்ந்திருந்த ஆதரவாளர்கள் இவர்களுக்கு உற்ச்சாக வரவேற்ப்பளித்தனர்.


Close