ஹிஜாபுக்காக +2 தேர்வரையில் போராடி வெற்றி கண்ட மாணவி..!

திருச்சியில் புர்கா அணிந்து தேர்வு எழுத தடை விதித்த பள்ளியை எதிர்த்து வென்ற மாணவி!

திருச்சியில் ஒரு இஸ்லாமிய பள்ளியில் பயிலும் மாணவி +2 தேர்வு எழுத வேறொரு பள்ளிக்கு சென்றுள்ளார். அந்த பள்ளியில் தேர்வு நடத்தும் ஆசிரியர் அந்த மாணவி புர்காவுடன் தேர்வு எழுத தடை விதித்தார். அந்த மாணவியோ புர்காவை கழற்ற மாட்டேன் என்று விவாதம் செய்துள்ளார். 
இதனையடுத்து அந்த மாணவி பயிலும் பள்ளியின் தாளாளர் இந்த பிரச்சனையில் தலையிட்டு Human Guidance and Welfare Center, Chennai கோர்ட்டில் வழக்கு தொடுத்தார். இறைவனின் கிருபையால் தேர்வு எழுதுவதற்க்காக இஸ்லாமிய அடையாளமான புர்காவை கழற்ற தேவையில்லை என்று நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதில் நமக்கு சில படிப்பினைகள் உள்ளது. அந்த மாணவி எதிர்பேச்சு பேசாமல் அமைதியாக இருந்திருந்தால் ஆசியர்களுக்கு இஸ்லாமிய துவேசத்துடன் அடக்கு முறையை அதிகரிக்க வாய்ப்புள்ளது. நபி வழிப்படி தீமையை கையாலோ ,வாயாலோ எதிர்த்தால் தூய இஸ்லாத்தை நம்மால் பின்பற்ற முடியும்.
ஆசிரியர்களுக்கு பயந்து புர்கா அணியாமல் பள்ளிக் கூடங்களுக்கு அனுப்பும் பெற்றோர்கள் இனி ஹிஜாப்பை அணிந்து பயமின்றி அனுப்பலாம்”
NEWS BY Riyas Siraj
Close